புதுதில்லி:
2020 அக்டோபரில், இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி, 5.4 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் அக்டோபர் மாதத்துக்கான இந்தியாவின் வணிக ஏற்றுமதி - இறக்குமதி குறித்த விவரங் களை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2020 அக்டோபரில் 24.82 பில்லியன் டாலர் மதிப்பிலானபொருட்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2019-ஆம் ஆண்டின் அக்டோபர் மாத ஏற்றுமதியைக் காட்டிலும் 5.4 சதவிகிதம் குறைவாகும். அதேபோல, 2020-21 நிதியாண் டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில், 150.07 பில்லியன் டாலர் அளவிற்கே ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. இதுவும் 2019-20 ஆம்நிதியாண்டின் 7 மாத ஏற்றுமதியைக் காட்டிலும் 19.05 சதவிகிதம் குறைவாகும்.
பெட்ரோலிய பொருட்கள், ரத்தினங்கள், நகைகள், தோல் பொருட் கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு காரணம் என்றுமத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் கூறியுள்ளது.இந்தக் காலத்தில், இறக்குமதியும் 2019 - 20 நிதியாண்டைக் காட்டிலும் 11.56 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.இறக்குமதி வீழ்ச்சி காரணமாக, வர்த்தக பற்றாக்குறையும் 8.78 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது முன்பு 11.76 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.